மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மகளிர் மட்டும்! அடுத்தடுத்து வெளியாகும் 'கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள்'

கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது குறித்து...

Mysaa | Mookuthi Amman | Eetha

மைசா | மூக்குத்தி அம்மன் 2 | ஈதா

Published On :29 அக்டோபர் 2026, 5:31 pm IST

அடுத்த இரு மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட 6 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. மேலும், அடுத்த வாரம் தீபாவளி திருநாளையொட்டி உச்ச நடிகர்களின் திரைப்படங்களும் வெளியாகவுள்ளன.

இதனிடையே, அடுத்த 2 மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட 6 முக்கிய திரைப்படங்களும் வெளியாகின்றன.

தீபாவளி திருநாளையொட்டி நவம்பர் 6-ல் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் வெளியாகிறது. மேலும், நயன்தாரா நடிப்பிலேயே ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ராக்காயி திரைப்படமும் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகிறது.

ரஷ்மிகா மந்தனா நடிப்பில் ஆக்சன் காட்சிகளால் உருவாகியுள்ள மைசா திரைப்படம், நவ. 27-ல் வெளியாகிறது.

மகாராஷ்டிரத்தில் மிகவும் புகழ்பெற்ற லாவணி நடனக் கலைஞர் விதாபாய் நாராயண்காவ்ங்கர் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள ஈதா திரைப்படம், டிச. 4-ல் வெளியாகிறது.

பாலிவுட்டில் திரிப்தி டிம்ரி நடிப்பில் உருவாகியுள்ள கமல் ஔர் மீனா திரைப்படம், வருகிற டிசம்பர் மாதம் வெளியாகிறது. இந்தப் படம், மறைந்த பாலிவுட் இயக்குநர் கமல் அம்ரோஹி மற்றும் அவரது காதல் மனைவி மீனா குமாரி இடையிலான உண்மைக் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்சன், காதல், அமானுஷ்யம் என கலவையான கதையுடன் அனீத் பத்தா நடிப்பில் உருவாகியுள்ள சக்தி ஷாலினி திரைப்படம், இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்த மார்ச் மாதத்துக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Summary

Upcoming films led by Women of Indian Cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.