மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜய்சேதுபதி விலகல்! அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ் டீசர்!

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ் டீசர் வெளியானது குறித்து...

Avengers: Doomsday

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே - யூடியூப்

Published On :29 அக்டோபர் 2026, 3:38 pm IST

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசர் வெளியானது.

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவெஞ்சர்: டூம்ஸ்டே, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் வெளியாகவிருக்கிறது. முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் (தார்), டாம் ஹிட்டில்ஸ்டன் (லோகி), பால் ரூட் (ஆன்ட்மேன்), பெனடிக்ட் கம்பர்பேட்ச் (டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்), செபாஸ்டின் ஸ்டான் (பகி), ஆண்டனி மேக்கி (ஃபால்கன்), பால் பெட்டனி (விசன்) உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் உயிரிழந்ததால், டூம்ஸ்டே படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் இருக்காது. இருப்பினும், அயர்ன்மேன் பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டோனி ஜூனியர், இந்தப் படத்தில் டாக்டர் டூம்ஸ்டே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசரை படக்குழு புதன்கிழமையில் வெளியிட்டது. உலகளவில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்கூட்டியே டிசம்பர் 17-ல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவெஞ்சர்ஸ் படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு தமிழ்ப் பதிப்பில் ரவிசங்கர் தேவநாராயணன் குரல் கொடுத்திருந்தார். ஆனால், எண்ட்கேம் படத்தில் மட்டும் அயர்ன்மேன் பாத்திரத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்தார். இருப்பினும், அயர்ன்மேன் பாத்திரத்துக்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்தது ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்றது.

இதனிடையே, டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கும் விஜய்சேதுபதி குரல் கொடுக்க வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களில் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை வெளியான டீசரில் டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கு ரவிசங்கர் குரல் கொடுத்துள்ளார்.

Summary

Avengers: Doomsday To Release A Day Early In India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.