மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அயர்ன்மேன் 70.3 கோவா: இந்திய ராணுவ வீரர் பிடென் சிங் முதலிடம்!

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போட்டியில் இந்திய ராணுவ வீரர் பிடென் சிங் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பிடென் சிங்

Published On :1 நவம்பர் 2026, 11:37 pm IST

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போட்டியில் இந்திய ராணுவ வீரர் பிடென் சிங் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கோவாவில் ‘அயர்ன்மேன் 70.3’ போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கோவா அரசு ஆறாவது ஆண்டாக அயர்ன்மேன் மற்றும் ’யோஸ்கா’ அமைப்புடன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றனர்.

இந்தச் சவாலான போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

அயர்ன்மேன் 70.3 போட்டி என்பது 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள் பயணம் மற்றும் 21.1 கி.மீ ஓட்டம் ஆகிய கடினமான நிலைகளைக் கொண்டது. இதனைக் குறைந்த நேரத்தில் கடப்பவருக்கு அயர்ன்மேன் பட்டம் வழங்கப்படும். போட்டியை நிறைவு செய்பவர்களுக்கு அதற்குரிய மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தாண்டில், இந்திய ராணுவ வீரர் பிடென் சிங் ஆண்களுக்கான பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

அவர் 4 மணி நேரம், 24 நிமிடங்கள், 29 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கான்ஸ்டான்டின் பெலோசோவ் 2025-ஆம் ஆண்டில் 4:25:47 நேரத்தில் போட்டியை நிறைவு செய்ததே குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்த சாதனையாக இருந்தது.

அந்தச் சாதனையை, 1 நிமிடம் 18 வினாடிகள் வித்தியாசத்தில் பிடென் சிங் முறியடித்தார்.

பிடென் சிங், அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் ராணுவப் பணியில் இருந்துகொண்டே இந்தப் போட்டிக்காகத் தயாராகி வந்துள்ளார். அவரது பணிச் சுமைகளுக்கு மத்தியிலும், மூன்று மாதங்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு முதலிடம் பிடித்ததாக அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகப் பாதியிலேயே வெளியேறிய பிடென் சிங், இந்த ஆண்டு புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியதாகக் கூறினார்.

வெற்றிக்குப் பின் பேசிய பிடென் சிங், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இன்றையப் போட்டியில் புதிய சாதனை படைக்கவேண்டும் என இலக்கு வைத்திருந்தேன். என்னுடைய அடுத்த இலக்கு 'அயர்ன்மேன் உலக சாம்பியன்ஷிப்' போட்டிக்குத் தகுதி பெறுவதே” என்று அவர் தெரிவித்தார்.

அயர்ன்மேன் போட்டி உலகின் மிகச் சவாலான சகிப்புத்தன்மை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இன்றைய போட்டியின் பெண்களுக்கான பிரிவில், மெரினா ஷிலியாக்டினா 5:30:29 என்ற நேரத்தில் போட்டியை நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.

தமிழகத்திலிருந்து ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும், அரசியல்வாதியுமான அண்ணாமலை இப்போட்டியில் கலந்துகொண்டு நிறைவு செய்துள்ளார்.

Summary

Ironman 70.3 Goa: Indian Army soldier Biten Singh takes the top spot!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.