கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேப்டன் அமெரிக்காவுக்கு 5 ஆண்டுகள் ஒப்பந்தத்தை நீட்டித்த ஏசி மிலன்!

அமெரிக்க கால்பந்து வீரருக்கு ஏசி மிலனில் ஐந்தாண்டுகள் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

Footballer Christian Pulisic

கால்பந்து வீரர் கிறிஸ்டியன் புலிசிக் - படங்கள்: எக்ஸ் / ஏசி மிலன்

Published On :1 நவம்பர் 2026, 2:44 pm IST

கேப்டன் அமெரிக்கா என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் புலிசிக்கிற்கு (27 வயது) ஏசி மிலன் அணியில் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை காயத்துக்குப் பிறகு அவர் விளையாடும் முதல் போட்டியிலேயே தாக்கத்தை ஏற்படுத்தினார். நேற்றிரவு நடைபெற்ற இன்டர் மிலனுக்கு எதிராகவும் கோல் அடித்தார். மொத்தமாக டெர்பி போட்டியில் 4 கோல்கள் அடித்துள்ளார்.

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ தொடரில் ஏசி மிலன் முன்னணி அணியாக இருக்கிறது. இதில் நட்சத்திர வீரராக கிறிஸ்டியன் புலிசிக் இருக்கிறார்.

2023 முதல் ஏசி மிலன் அணிக்காக விளையாடும் புலிசிக் மொத்தமாக 142 போட்டிகளில் விளையாடி 45 கோல்கள், 22 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு 2031 வரைக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இன்டர் மிலன் போட்டியில் 3-1 என வென்றது.

இது குறித்து புலிசிக், “டெர்பி போட்டிகளில் தொடர்ச்சியாக கோல்கள் அடிக்க விரும்புகிறேன். அப்படித்தான் வெற்றி பெற முடியும். இந்தப் புள்ளிகள் மிகவும் முக்கியமானவை. இதேபோல் நாங்கள் எப்போதும் விளையாட விரும்புகிறோம்.

இந்த மாதிரி மிகப்பெரிய போட்டிகள் நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்பதில் எங்களுக்கு வியப்பு இல்லை என்றார். சான் சிரோ திடலில் இந்தப் போட்டியைப் பார்க்க 78,000 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். அடுத்தாண்டு இந்தத் திடல் இடிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரூபன் அமோரிம் தற்போது ஏசி மிலன் அணிக்குத்தான் பயிற்சியாளராக இருக்கிறார். புலிசிக் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Summary

Christian Pulisic marks new deal by scoring again in Milan derby win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.