கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெர்பியில் ஏசி மிலன் (8-0) ஆதிக்கம்..! டியாகோ மொரேரா அசத்தலால் இன்டர் மிலனை வீழ்த்தியது!

இத்தாலியின் சீரி ஏ கால்பந்துத் தொடரில் இன்டர் மிலனை வென்ற ஏசி மிலன் குறித்து...

Goal scored by Diego Moreira and AC Milan players

கோல் அடித்த மகிழ்ச்சியில் தியாகோ மொரேரா மற்றும் ஏசி மிலன் வீரர்கள் - படங்கள்: எக்ஸ் / ஏசி மிலன்

Published On :1 நவம்பர் 2026, 1:13 pm IST

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்துத் தொடரில் ஏசி மிலன் அணி தனது சொந்த மண்ணில் டெர்பி அணியான இன்டர் மிலனை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்டர் மிலனுக்கு எதிராக தோல்வியே சந்திக்காமல் ஏசி மிலன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது. கோமோ அணி ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஏசி மிலன் அணி தனது சொந்த மண்ணில் அதன் டெர்பி அணியான இன்டர் மிலன் உடன் மோதியது. இந்தப் போட்டியில் நான்காவது நிமிஷத்திலேயே கிறிஸ்டியன் புலிஸ்டிக் கோல் அடித்தார்.

அடுத்ததாக ரேபியாட் 10ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஏசி மிலன் 2-0 என முன்னிலை வகித்தது. இன்டர் மிலனின் பஸ்டோனி 22ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-1 என மாற்றியது.

அடுத்ததாக 43ஆவது நிமிஷத்தில் டியாகோ மொரேரா கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் 3-1 என இன்டர் மிலனின் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்காமல் சென்றன. இறுதியில் இன்டர் மிலன் 3-1 என வென்றது.

இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், ஒரு கோல் அடித்த டியாகோ மொரேரா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலமாக ஏசி மிலன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்டர் மிலனுக்கு எதிரான கடைசி 8 போட்டிகளில் ஏசி மிலன் தோல்வியே சந்திக்காமல் 6ல் வெற்றியும் 2ல் சமனையும் சந்தித்துள்ளது.

Summary

AC Milan dominate the derby (8-0)! Inter Milan defeated, thanks to a brilliant performance by Diego Moreira!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.