தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோல் அடிக்காத மெஸ்ஸி: 90ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன்படுத்திய இன்டர் மியாமி!

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி - சின்சினாட்டி மோதிய போட்டி குறித்து...

Inter Miami forward Lionel Messi (10) celebrates with teammates after forward Luis Suarez, not pictured, scored the side's first goal during the second half of an MLS soccer match against FC Cincinnati, Wednesday, Oct. 28, 2026, in Miami. (AP Photo/Rebecca Blackwell)

இன்டர் மியாமி அணியினருடன் லியோ மெஸ்ஸி - AP

Published On :29 அக்டோபர் 2026, 11:59 am IST

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி - சின்சினாட்டி மோதிய போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு இன்டர் மியாமி மூன்றாமிடத்தில் இருக்கிறது.

இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் சின்சினாட்டி உடன் மோதியது. இந்தப் போட்டியில் முதல் பாதிவரை யாரும் கோல் அடிக்காமல் இருந்தார்கள்.

இரண்டாம் பாதியில் லூயிஸ் சௌரஸ் 61ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். பின்னர், சின்சினாட்டி அணியினர் 80, 86ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற்றனர்.

போட்டியின் 90ஆவது நிமிஷத்தில் ரிக்கெல்மே ஃபிலிப்பி கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார். இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்கவில்லை; மாறாக அவருக்கு யெல்லோ கார்டு அளிக்கப்பட்டது.

இன்டர் மியாமி 58 சதவிகித நேரம் பந்தை தங்கள்வசம் வைத்திருந்தார்கள். 681 பாஸ்களை 91 சதவிகித துல்லியத்துடன் செய்தார்கள். 9 ஃபௌல்களை செய்த இன்டர் மியாமி அணியினர் மூவருக்கு தலா ஒரு யெல்லோ கார்டுகளையும் பெற்றார்கள்.

இன்டர் மியாமி அணியின் லூயிஸ் சௌரஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு புள்ளிப் பட்டியலில் இன்டர் மியாமி மூன்றாமிடத்தில் இருக்கிறது. நாஷ்வில்லி முதலிடமும் நியூ இங்கிலாந்து இரண்டாமிடமும் வகிக்கிறது.

இன்டர் மியாமி அணி ஏற்கெனவே ஃபிளே ஆஃப்ஸுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை சப்போர்ட்டர்ஸ் ஷீல்ட் வெல்லாமுடியவில்லை. நாஷ்வில்லி அந்த விருதினை உறுதி செய்துள்ளது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் லூயிஸ் சௌரஸ்

கோல் அடித்த மகிழ்ச்சியில் லூயிஸ் சௌரஸ் - AP

Summary

Lionel Messi goes scoreless, Inter Miami needs late goal to tie Cincinnati 2-2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.