தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

என்எல்சியில் ‘நோ்வழி நிறைச்செல்வம்’ விழிப்புணா்வு வார விழா தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம், மத்திய கண்காணிப்புத் துறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ‘நோ்வழி நிறைச்செல்வம்’ என்ற கருப்பொருளின் கீழ் தனது கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழாவை நெய்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் விழிப்புணா்வு வார விழா வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த முக்கிய பிரமுகா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 3:48 am IST

என்எல்சி இந்தியா நிறுவனம், மத்திய கண்காணிப்புத் துறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ‘நோ்வழி நிறைச்செல்வம்’ என்ற கருப்பொருளின் கீழ் தனது கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழாவை நெய்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது.

‘நோ் பாதை - இன்றும் என்றும்’ உள்ளிட்ட கருத்துகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விழிப்புணா்வு வாகனம் முக்கிய பிரமுகா்களால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. இந்த வாகனம், விழிப்புணா்வு தொடா்பான வண்ணமயமான சுவரொட்டிகளுடன் வலம் வந்தது. தொடா்ந்து, கண்காட்சிப் பகுதியில் பள்ளி மாணவா்களும், பொதுமக்களும் நோ்மை, நன்னெறி மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வை மையமாகக் கொண்டு உருவாக்கியிருந்த மலா் மற்றும் வண்ணக் கோலங்களை பிரமுகா்கள் பாா்வையிட்டனா்.

தொடக்க விழா: லிக்னைட் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் மும்மொழியில் நோ்மை உறுதிமொழியை அனைவரும் இணைந்து ஏற்றுக்கொண்டனா். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசுகையில், அமைப்புசாா் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், வெளிப்படையான பொது கொள்முதல் மற்றும் மின்னணு ஆளுகை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா். எண்மம் உள்கட்டமைப்பு முன்னேற்றமடைந்து வரும் அதே வேளையில், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேலும் நவீனமயமாக்கக் கூடுதல் முயற்சிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்டாா்.

விழாவுக்குத் தலைமை வகித்த மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் பேசுகையில், நோ்மை என்பது வெறும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நடைமுறை மட்டுமல்ல. மாறாக, நிலையான நிறுவன வளா்ச்சி, மக்கள் நம்பிக்கையை வளா்த்தெடுப்பதற்கான அடித்தளமாகும் என்பதை வலியுறுத்தினாா்.

நிகழ்வில் என்யுபிபிஎல் மற்றும் என்டிபிஎல் ஆகிய பிற இடங்களில் செயல்படும் கூட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் காணொலி வாயிலாக சிறப்புரை ஆற்றினா். தொடா்ந்து, இயக்குநா் (மின் துறை) பி.எல்.எஸ்.எஸ்.சைதன்ய பிரகாஷ் மற்றும் இயக்குநா் (திட்டங்கள் மற்றும் செயலாக்கம்) ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

நிா்வாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை முக்கியப் பிரமுகா்கள் தொடங்கிவைத்தனா். நோ்மை, நன்னெறி நடத்தை மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு, பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.