பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கமே... திருமண நாளில் மனைவியைக் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண்!

திருமண நாளில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்ட ஹரிஷ் கல்யாண்....

நடிகர் ஹரிஷ் கல்யாண் தன் மனைவியுடன்.

Published On :28 அக்டோபர் 2026, 1:10 pm IST

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமண நாளில் மனைவியுடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இவர் வினீத் வரபிரசாத் இயக்கும் தாஷமக்கான் படத்தில் நடித்து வருகிறார். நூறு கோடி வானவில் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் கடந்த 2022 ஆம் ஆண்டு நர்மதாவை என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த மார்ச் 3 ஆம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், நான்காம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், “அந்நியர்களாக இருந்து காதலில் விழுந்து ஒருவரை ஒருவர் தீவிரமாக நேசித்து பெற்றோராகி அதனுடனான பொறுப்புகளைக் கற்றுக்கொண்டது வரை எவ்வளவு அழகான பயணம் இது!

எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகவும் ஒருவரின் வெற்றியை மற்றவர் கொண்டாடுபவர்களாகவும் எல்லா நேரங்களிலும் உறுதுணையாகவும் இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் பக்க பலமாக நின்றிருக்கிறோம்.

ஒன்றாக வளர்ந்து, சிரித்து ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்து அன்புடன் பயணிப்போம். நம் வாழ்வில் இன்னும் பல அழகான அத்தியாயங்கள் இணைந்து எழுதப்படட்டும்! நம் மகிழ்ச்சியான நான்காம் ஆண்டு என் தங்கமே!” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Harish Kalyan has shared photos with his wife on their wedding day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.