பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

15 ஆண்டுகள் ஆயிரம் கனவுகள்... உருக்கமாக அறிக்கை வெளியிட்ட சனந்த்!

நடிகர் சனந்த் வெளியிட்ட அறிக்கை குறித்து...

நடிகர் சனந்த்

Published On :31 அக்டோபர் 2026, 6:27 pm IST

நடிகர் சனந்த் டோரதி திரைப்படத்திற்காகக் கிடைத்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற டோரதி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

முக்கியமாக இப்படத்தில் திருநங்கையாக நடித்த சனந்த்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆணாகவும் பின் திருநங்கையாவும் இரு வித்தியாசமான நடிப்பைப் பிரமாதமாக வழங்கியிருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.

சில காட்சிகளைக் குறிப்பிட்டு ஆணாக இருந்து பெண்ணாக மாறியதும் சனந்த் வெளிப்படுத்திய நளினங்கள் கதைக்கு உயிரோட்டமாக இருந்தன என பல பதிவுகளும் எழுதப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் சனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், “15 வருடங்கள் ஆயிரம் கனவுகள். எண்ணற்ற போராட்டங்கள். தொடக்கமாக, இந்தத் தருணம். என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஒரு நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

சமீபத்தில் ஒரு பதிவில் படித்த ஒரு வரி. "பல தசாப்தங்கள் எதுவுமே நடக்காமல் கடந்து போகலாம். ஆனால், சில வாரங்களில் பல தசாப்தங்களுக்கான மாற்றங்கள் நிகழ்ந்துவிடும்."

நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பும், பாராட்டுகளும் இந்த வரிகளுக்கு அப்படியே பொருந்துகின்றன. நீங்கள் தந்த ஆசீர்வாதங்கள்! இதயப்பூர்வமான அரவணைப்புகள், கண்களில் கசியும் கண்ணீர்... என்னுடைய நடிப்பைப் பற்றிப் பேசும்போது, என் பயணத்தின் ஒரு பகுதி உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டதைப் போல நீங்கள் வெளிப்படுத்தும் அந்த உற்சாகம்! இதுதான் எனக்குக் கிடைத்த விருது!

TIFF வரை பயணித்து உங்கள் இதயங்களுக்குள் இடம்பிடித்து என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு உணர்வை இந்தத் திரைப்படம் எனக்குப் பரிசளித்திருக்கிறது.

நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற அந்த உணர்வு! நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு குறுஞ்செய்தியும், கைப்பட எழுதிய கடிதமும், கட்டுரையும், எடிட்டும், தொலைபேசி அழைப்பும்.. என்னுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் சென்றிருக்கின்றன.

இது தானாக திகழ்ந்தது. இது உண்மையானது. இது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

டோரதியைப் பார்த்தவர்கள், அதைப் பற்றிப் பேசியவர்கள், தங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைத்தவர்கள், அந்தத் திரைப்படத்தைக் கொண்டாடியவர்கள், அதற்காகக் குரல் கொடுத்தவர்கள், அதனுடன் சேர்ந்து அழுதவர்கள், சிரித்தவர்கள், அல்லது என் நடிப்பு தங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுத்தது என்று ஒரு நிமிடம் ஒதுக்கி என்னிடம் பகிர்ந்துகொண்டவர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி!

நீங்கள் அனைவரும் என் கதையின் ஒரு பகுதியாக மாறிவிட்டீர்கள். அதேபோல், டோரதியும் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் என் தேவதைகள்!

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, இறுக்கமாக அணைத்து, உங்கள் அன்பு எனக்கு எவ்வளவு பெரிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுவரை, இந்த வார்த்தைகளின் வழியாக என்னால் அனுப்ப முடிந்த மிகப்பெரிய அன்பான அரவணைப்பை உங்களுக்குத் தருகிறேன்.

இது வெறும் ஆரம்பம்தான்! இன்னும் இன்னும் பல சுவாரஸ்யமான, சிறப்பான சினிமா நோக்கி.. Lets go!

எல்லாருக்கும் வரலாறு சிறப்புமிக்க ஒரு முத்தம்!

டோரதி என்பது அன்பு!

டோரதி என்பது நம்பிக்கை!

டோரதி என்பது நாம் அனைவருமே!” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Sananth has released a statement expressing his gratitude for the recognition received for the film Dorothy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.