கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்த் தொடரில் நடிக்கும் பாவனா!

தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் பாவனா....

பாவனா

Published On :31 அக்டோபர் 2026, 4:11 pm IST

நடிகை பாவனா தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் நாயகியாக நடிக்கிறார்.

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. நிறைய ஹிட்ஸ்களை கொடுத்த நடிகை என்பதால் பட வாய்ப்புகளும் அதிகரித்தன.

இடையே, தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் சில ஆண்டுகள் மலையாள சினிமாவிலிருந்து பாவனா ஒதுங்கியிருந்தார். தற்போது, மீண்டும் அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாகத் தமிழில் தி டோர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், தமிழில் சோனி விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நோட்புக் 90’ஸ்: காதல் பிளாஷ்பேக் என்கிற தொடரில் முன்னணி நாயகியாக பாவனா நடிக்கிறார். இயக்குநர் மித்ரன் ஜவஹர் மேற்பார்வையில் இயக்குநர் சதாசிவம் இயக்கும் இத்தொடரில், இனக்கவர்ச்சியால் பள்ளி மாணவர்களிடையே உருவாகும் காதல்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்வழிகாட்டும் ஆசிரியையாக பாவனா நடிக்கிறாராம். 1990களில் பிறந்தவர்களின் கதையாக எடுக்கப்பட உள்ள இத்தொடர் முதலில் சோனி விழாவிலும் பின் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

Actress Bhavana is playing the lead role in a Tamil television serial.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.