தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாரதிராஜாவின் புலவர் படத்தின் டிரைலர், ரிலீஸ் தேதி!

நடிகராக பாரதிராஜாவின் கடைசி படமான புலவர் படத்தின் டிரைலர், ரிலீஸ் தேதி குறித்து...

Poster of the film Pulavar!

புலவர் படத்தின் போஸ்டர் - படம்: யூடியூப் / லஹரி மியூசிக்

Published On :23 அக்டோபர் 2026, 5:39 pm IST

நடிகராக பாரதிராஜாவின் கடைசி படமான புலவர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய டிரைலரும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா கடந்த ஜூன் 10 ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரை இல்லத்தில் காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு அருகே உள்ள வத்தலக்குண்டு கொண்டு செல்லப்பட்டு காட்ரோடு தோப்பில் அரசு மரியாதையுடம் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் தனது 84 வயதிலும் மலையாளத்தில் மோகன் லாலின் துடரும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மறைந்த இயக்குநர் பாரதிராஜா, கடைசியாக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் முருகைய்யா இயக்கத்தில் புலவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கான புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

டார்க் காமெடி பாணியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் குறித்து இதன் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் நேர்காணலில் கூறுகையில், “இந்தப் படமானது தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, குற்றவாளிகளை எப்படி கையாளுகிறார் என்பதைப் பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் அக்.30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Summary

Trailer and release date of Bharathiraja's film Pulavar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.