மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிகிலா விமலின் தூமகேது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

நடிகை நிகிலா விமல் நடித்துள்ள தூமகேது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து...

Dhoomakethu film poster

தூமகேது படத்தின் போஸ்டர் - படம்: இன்ஸ்டா / நெட்பிளிக்ஸ் இந்தியா

Published On :20 அக்டோபர் 2026, 8:28 pm IST

நடிகை நிகிலா விமல் நடித்துள்ள தூமகேது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.

வெற்றிவேல், கிடாரி படங்களின் மூலம் தமிழில் அறிமுகமான நிகிலா விமல் மாரி செல்வராஜின் வாழை திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்றார்.

குருவாயூர் அம்பலநடையில் படத்தின் வெற்றிக்குப் பிறகு நிகிலா விமல் பெரிதாக மலையாளத்தில் வெற்றி கிடைக்காமல் இருக்கிறார்.

ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவான தூமகேது படம் சுதி மாடிசன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த செப்.25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வரும் அக்.23ஆம் தேதி நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் சஜின் கோபு நாயகனாவும் நிகிலா விமல் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இதில் ஷன் டாம் சாக்கோ, மஞ்சு பிள்ளை, கணபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ரூ.165 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம் லூப் முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் ஓடிடியிலாவது கவனம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Dhoomakethu on OTT: Here's when Sajin Gopu-Nikhila Vimal film releases

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.