மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜா ராணி தொடர் நாயகனின் தி டார்க் ஹெவன் பட ஓடிடி வெளியீட்டுத் தேதி!

டார்க் ஹெவன் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

the dark heaven

தி டார்க் ஹெவன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :29 அக்டோபர் 2026, 8:11 pm IST

ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமான நடிகர் சித்துவின் தி டார்க் ஹெவன் படத்தின், ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

டி3 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் தி டார்க் ஹெவன்.

இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளது. சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். பி. கே. மணிகண்டன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

தி டார்க் ஹெவன் படத்தின் நாயகனாக நடிகர் சித்து, காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ரித்விகா, தர்ஷிகா, வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாளில் அந்த ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. அது ஏன்? அதைச் சுற்றி காவல் துறை மேற்கொள்ளும் விசாரணையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம், கடந்த செப். 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், தி டார்க் ஹெவன் திரைப்படம் அக். 30 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

நடிகர் சித்து, ராஜா ராணி 2, திருமணம், வள்ளியின் வேலன் தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Information has emerged regarding the OTT release of the film 'The Dark Heaven', starring actor Sidhu—who gained popularity for his role in the second season of the series 'Raja Rani'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.