கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆர்யா - நிகிலா விமலின் ஹலோ காதல்! முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ஆர்யாவின் “ஹலோ காதல்” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

arya's hello kadhal

“ஹலோ காதல்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது...

Published On :23 அக்டோபர் 2026, 6:33 pm IST

நடிகர் ஆர்யா நாயகனாக நடித்துள்ள “ஹலோ காதல்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில், நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கும் புதிய படம் “ஹலோ காதல்”. இந்தப் படத்தை நடிகர் ஆர்யா மற்றும் சில்வர் கிரெயின் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துத் தயாரித்துள்ளனர்.

நடிகர்கள் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், “ஹலோ காதல்” படத்தின் “கண்ணும் கண்ணும்” எனும் முதல் பாடல் இன்று (அக். 23) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை, பாடகர்கள் கபில் கபிலன் மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ளனர்.

ஏற்கெனவே, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, தினேஷ், கலையரசன், ஷபீர், குரு சோமசுந்தரம், ஷோபிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் “வேட்டுவம்” படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The first song from the movie “Hello Kadhal” starring actor Arya has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.