பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கப்புள்ள... ஜீவாவின் தகப்பன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் படத்தின் முதல் பாடல் குறித்து...

Poster of the film 'Thagappan'

தகப்பன் படத்தின் போஸ்டர் - படம்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா

Published On :30 அக்டோபர் 2026, 6:33 pm IST

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் படத்தின் முதல் பாடலான தங்கப்புள்ள எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் ‘தகப்பன்’ என்ற படம் உருவாகி வருகிறது.

மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது.

மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.

மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகிய அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Summary

'Thangappulla', the first song from the film 'Jeeva's Father', has been released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.