மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எத்தனை ரூ. 500 கோடி..? சிம்ம சொப்பனமாகத் திகழும் சூப்பர் ஸ்டார்!

அதிக முறை ரூ. 500 கோடி வசூலில் ரஜினிகாந்த்....

நடிகர் ரஜினிகாந்த்

Published On :22 அக்டோபர் 2026, 12:54 pm IST

நடிகர் ரஜினிகாந்த் அதிக முறை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் யார் என்கிற கேள்விக்கே இடம் இல்லாத வகையில் நாடு முழுவதும் மிகப்பெரிய செல்வாக்குடனும் புகழுடனும் இருக்கிறார். ரஜினி என்பதைவிட சூப்பர் ஸ்டார் என்றால் கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை கொண்டாடாத ரசிகர்கள் குறைவு.

சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த் பார்க்காத வெற்றியும் தோல்வியும் இல்லை. ஆனால், அப்போதும் இப்போதும் தனக்கென தனி வழியில் ஆச்சரியப்படுத்தும் அங்கீகாரங்களுடன் நடித்து வருகிறார்.

அப்படி எவ்வளவோ சாதனைகளுக்கு மத்தியில், ரஜினியிடமிருந்து புதிய சாதனை வந்திருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் அதிக முறை ரூ. 500 கோடி வசூலித்த நடிகர்கள் பட்டியலில் தற்போது ரஜினியும் இணைந்துவிட்டார். 2.0, ஜெயிலர், கூலி, ஜெயிலர் - 2 என நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்து பல பாலிவுட் நடிகர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

இந்தச் சாதனையைச் செய்த நடிகர்களான ஆமீர் கான் (தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பிகே, தூம் - 3) பிரபாஸ் (பாகுபலி, பாகுபலி - 2, சலார், கல்கி ஏடி) ஆகியோருக்கு அடுத்ததாக ரஜினியும் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகராகக் கருதப்படும் ஷாருக்கான் கூட இந்தச் சாதனையைச் செய்யவில்லை. பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஷாருக்கானின் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்கள். தமிழில் ரஜினிக்கு அடுத்து முதல்வர் விஜய்யின் லியோ ரூ.500 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும் பிற நடிகர்களின் வயதை ஒப்பிட மூத்தவரான ரஜினிகாந்த் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருவது இந்திய சினிமாவுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்து வருகிறது என்றால் மிகையல்ல. ரஜினியின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக ஜெயிலர் - 2 மாற உள்ள சூழலில் இந்த புதிய சாதனை ரஜினி ரசிகர்களிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Actor Rajinikanth is on the list of actors who have grossed more than Rs 500 crores the most times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.