தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குட் மார்னிங்... வித்யா பாலனுக்கு அதிகரிக்கும் ரசிகர்கள்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் வித்யா பாலன் நடிப்பு கவனம் பெற்றுள்ளது..

வித்யா பாலன்

Published On :18 அக்டோபர் 2026, 10:45 am IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தில் வித்யா பாலன் நடிப்பு வரவேற்பு பெற்றுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் வணிக ரீதியாக பெரிய சாதனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தைத் தவிர நடிகர்கள் நமோ நாராயணன் மற்றும் வித்யா பாலனின் கதாபாத்திரங்களும் அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

அதிலும், நடிகை வித்யா பாலனின் தோற்றமும் அவருக்கான வசனங்களும் கச்சிதமாக இருந்ததால் கடந்த சில நாள்களாக வித்யா பாலனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திரைப்படத்தில் நடிகர் ரஜினி, வித்யா பாலனுக்கு குட் மார்னிங், குட் ஈவினிங் குறுஞ்செய்திகளை அனுப்பி பதிலுக்கு காத்திருப்பார். அதே போல், பல ரசிகர்களும் வித்யா பாலனுக்கு காலை வணக்கத்தை அனுப்பி பதில் கிடைக்குமா என காத்திருக்கின்றனர்!

Vidya Balan's performance in the film Jailer - 2, starring actor Rajinikanth, has been well received.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.