மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இயக்குநர் ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்?

இந்தியன் - 3 திரைப்படம் குறித்து....

Published On :22 அக்டோபர் 2026, 3:00 pm IST

இந்தியன் - 3 திரைப்படத்திற்காக இயக்குநர் ஷங்கர் வைத்த கோரிக்கையைத் தயாரிப்பு நிறுவனம் நிராகரித்துள்ளதாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் - 2 திரைப்படம் தோல்வியடைந்ததால் இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல் ஹாசனும் அதிருப்தியடைந்தனர். இதனால், இப்படத்தின் மூன்றாம் பாகப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

மேலும், படத்தைத் தயாரித்த லைகா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் கடுமையான இழப்பையும் சந்தித்தது. இதற்கிடையே, சமூக வலைதளங்களில் இந்தியன் - 2 திரைப்படத்தைப் பலரும் கிண்டலடித்தனர். இதன் காரணமாக, மூன்றாம் பாகம் வெளியாகாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அண்மையில் வார் மூட் (War mode) எனக் குறிப்பிட்ட இந்தியன் - 3 போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டது.

இந்த நிலையில், இந்தியன் - 3 திரைப்படத்தின் படப்பிடிப்பை மேலும் 25 நாள்கள் நடத்த வேண்டும் என இயக்குநர் ஷங்கர் லைகா நிறுவனத்தை அணுகினாராம். ஆனால், இதற்கு மேல் படப்பிடிப்புக்கு செலவு செய்ய முடியாது; இருக்கும் காட்சிகளைக் கொண்டு இறுதி வடிவத்தை உருவாக்குங்கள் என லைகா தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, பெரிய நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனம் மேற்கொண்டு சில கோடிகளைச் செலவு செய்து சிக்கலில் சிக்க வேண்டாம் என நினைக்கிறார்களாம்.

அதேநேரம், கண்டிப்பாக மீண்டும் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே இந்தியன் - 3 திரைப்படத்தைச் சிறப்பாக முடியும் என்பதிலும் ஷங்கர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியன் - 3 திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரிஷிகாந்த் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

The production company has reportedly rejected director Shankar's request for the film Indian 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.