துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படத்தில் நடித்த முஸ்தபா அஹ்மத் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்திய திரை வணிகத்தில் பெரும் பாய்ச்சலாக துரந்தர் மற்றும் துரந்தர் ரிவென்ஞ் படங்கள் வசூல் வேட்டையையே நிகழ்த்தியிருக்கின்றன.
முக்கியமாக, முதல் பாகம் ரூ. 1400 கோடி வசூலித்து இன்னும் சில திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்க, கடந்த மார்ச் 19 அன்று வெளியான துரந்தர் ரிவென்ஞ் படமும் வெளியான நான்கு நாள்களிலேயே ரூ. 760 கோடி வரை வசூலித்து இந்திய சினிமாவில் சாதனையைப் படைத்துள்ளது.
மேலும், இந்த வார இறுதிக்குள்ளாகவே ரூ. 1200 கோடியைக் கடந்து விரைவாக 2 ஆயிரம் கோடியை வசூலிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வசூல் சாதனைகள் ஒருபுறம் என்றால் இப்படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு வணிக ரீதியாகவும் ரசிகர்கள் ரீதியாகவும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, அக்ஷய் கன்னா, சாரா அர்ஜுன், அர்ஜுன் ராம்பால், மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்டோரின் சம்பளங்களும் இப்படங்களால் அதிகரித்துள்ளன. நாயகன் ரன்வீர் சிங்கிற்கு இந்தியளவில் ரசிகர்கள் பட்டாளம் கூடியதுடன் இனி பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் கவனம் செலுத்தும் இடத்திற்கும் சென்றுவிட்டார்.
அதே நேரம், இப்படத்தில் நடித்த சிறிய கதாபாத்திரங்களும் காட்சிகளின் தாக்கங்களால் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அப்படி, இரண்டாம் பாகத்தில் ரன்வீருக்கு துணையாக ரிஸ்வான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த முஸ்தபா அஹ்மத் கவனம் பெற்றுள்ளார். இவர் பத்மாவத் திரைப்படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங்குக்கு உடற்பயிற்சியாளராக இருந்தவராம். மேலும், பாலிவுட்டில் ஹ்ருத்திக் ரோஷன், விக்கி கௌசல் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜிம் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் ஆதித்யா தாரின் முதல் திரைப்படத்திலிருந்தே முஸ்தபா இருந்தாலும் இப்படத்தில் கிளைமேக்ஸ் சண்டையில் இவரின் தாக்குதல் காட்சிகள் பெரிதளவு கவனிக்கப்பட்டதால் நடிகராகவும் இவருக்கு பெயர் கிடைத்துள்ளது.
Summary
actor mustafa ahmed played noticiable role and gets good appreciates for dhurandhar the revenge
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

துரந்தர் தி ரிவென்ஞ் ரூ. 500 கோடி வசூல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
