தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சின்ன திரையில் அறிமுகமாகும் பிக் பாஸ் ரியா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கவனம் ஈர்த்த ரியா, சின்ன திரையில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

News image

பிக் பாஸ் ரியா - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :11 மார்ச் 2026, 4:35 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்ற ரியா, சின்ன திரையில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குப் பிறகு நிரோஷா - ஸ்டாலின் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள 'லட்சுமி மெஸ்' தொடரில் ரியா நடிக்கவுள்ளார்.

இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் விஜய் தொலைக்காட்சியில் சின்ன திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கனா கண்டேனடி, அழகே அழகு, சுட்டும் விழிச் சுடரே என மூன்று தொடர்கள் அறிமுகமாகியுள்ளன. இவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது லட்சுமி மெஸ் என்ற புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

பொன்னி தொடரின் நடிகை வைஷ்ணவி நாயகியாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வசந்த் வசி நாயகனாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷங்கரேஷ், மகேஷ், அஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இத்தொடரில் நடிகை ரியாவும் நடிக்கவுள்ளார். விளம்பரப் படங்களில் நடித்துவந்த ரியா, இத்தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகவுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து பிரபலமான ரியா, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

தற்போது சின்ன திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், ரசிகர்கள் பலர் ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Bigg boss 8 tamil fame Riya act in lakshmi mess serial in vijay tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.