நடிகர் விக்ரமின் 63-வது திரைப்படத்தில் நடிகை ரியா ஷிபு இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான “வீர தீர சூரன்” திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்தது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் புதிய படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதற்கான கிளிம்ஸ் வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ரியா ஷிபு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீம் மகளான இவர் வீர தீர சூரனின் தயாரிப்பாளராக இருந்தார். மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றிபெற்ற நிவின் பாலியின் சர்வம் மாயா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அசத்தினார். தற்போது, விக்ரம் - 63 படத்தில் இணைந்திருக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Reports suggest that actress Ria Shibu has joined the cast of actor Vikram's 63rd film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னுக்கு குவியும் வாய்ப்புகள்!
கர மேக்கிங் விடியோ!

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

