தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(ஏப். 23) நடைபெற்று வரும் நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் வாக்களித்தது குறித்து பதிவிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் எப்போது சுறுசுறுப்புடன் இருப்பவர் நடிகை கண்மணி மனோகரன். இவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்ட சின்ன திரை நடிகைகளில் இவரும் ஒருவர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.
இதனைத் தொடர்ந்து, அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடிகை கண்மணி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
இதனிடையே, நடிகை கண்மணி மனோகரன் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் இன்று(ஏப். 23) தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள்.
இது தொடர்பான கண்மணி மனோகரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “கான்ஃபிடன்டா இருங்க... நல்லதே நடக்கும்... வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார். கண்மணி, அஷ்வத் தம்பதியினர் வெள்ளை சர்ட், காக்கி பேன்ட் அணிந்து இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Summary
As the Legislative Assembly elections are underway in Tamil Nadu today (April 23), the couple Kanmani Manoharan and Ashwath have subtly hinted at whom they voted for.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடிவுக்கு வரும் 3 மதிய நேர தொடர்கள்!

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!

வீரா தொடரில் முடிவுக்கு வந்த நடிகையின் பாத்திரம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

