விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்னமருமகள் தொடர் 600 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனை தொலைக்காட்சி நிர்வாகம் வெகு விமர்சையாகக் கொண்டாடியுள்ளது.
சின்ன மருமகள் தொடரின் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தொகுத்து வெளியிட்டு, நடிகை ஸ்வேதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்வேதா பதிவிட்டுள்ளதாவது:
''சின்ன மருமகள் தொடர் 600 நாள்களை நிறைவு செய்துள்ளது. இது வெறும் தொடர் அல்ல; எனது உணர்வுகள். முதல் எபிஸோடுக்கு எத்தனை உற்சாகமாக இருந்தேன் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதும் அதே உணர்வுதான். முழு பயணமும் பல்வேறு உணர்வுகளைக் கொண்டது. அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு காட்சியும் எங்கள் ஒவ்வொருவரின் உழைப்பின் பிரதிபலிப்பாகவே உள்ளது. கேமரா குழுவினர், இயக்குநர் குழு கேப்டன் மனோஜ், எழுத்தாளர், பேராசிரியர் சந்துரு துரையப்பா, சக நடிகர்கள் என அனைவருமே எனக்கு உறுதுணையாக இருந்தீர்கள்.
உங்கள் அனைவரின் அன்புக்கு மிக்க நன்றிகள். உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். இதேபோன்று எங்களை ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இனிய 600'' எனப் பதிவிட்டுள்ளார்.

சின்ன மருமகள் தொடரிலிருந்து.. - இன்ஸ்டாகிராம்
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு சின்ன மருமகள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

சின்ன மருமகள் குழுவினர்... - இன்ஸ்டாகிராம்
கிராமத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, குடும்ப சூழல் காரணமாக பழமைவாத பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சின்ன மருமகள் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வி.ஆர். திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடருக்கு பலமாக அமைந்துள்ளது.
இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடரில், நவீன் - ஸ்வேதாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
Summary
Chinna marumagal serial Completes 600 Days in vijay tv Actress Swetha emotional post viral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

முடிவுக்கு வரும் 3 மதிய நேர தொடர்கள்!

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


