எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறப்போவதாக ஜனனி பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சலில் புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகவுள்ளதாகவும் அவர்களை மையப்படுத்தி தொடரின் கதை முற்றிலும் மாறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், இத்தொடருக்கு 'எதிர்நீச்சல் தொடர்கிறது' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு திருமணமாகிச் செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் - 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடரிலிருந்து.... - படம் - இன்ஸ்டாகிராம்
எனினும் எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த டிஆர்பி புள்ளிகளை முந்த முடியவில்லை. இதனால், கதையில் பல மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பார்வதி,
''எதிர்நீச்சல் தொடர் முற்றிலும் மாறப்போகிறது. புதுப்புது பாத்திரங்கள் அறிமுகமாகவுள்ளன. அவர்களுக்கான திரைக்கதை மூலம் கதை முற்றிலும் மாறப்போகிறது. முன்பை விட அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதான் எதிர்நீச்சலுக்கு இப்போதைக்கான அப்டேட் '' எனக் குறிப்பிட்டார். இதனால் தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Ethirneechal Update: Ethirneechal serial story change completly says Actress Parvathy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

சாகசம் செய்து பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மதுமிதா!

எதிர்நீச்சல் - 2 தொடர்: புதிய ஈஸ்வரி இவரா?

எதிர்நீச்சல் பார்வதி நடித்த இணையத் தொடர் நிறைவு! விடியோ வெளியிட்டு உருக்கம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


