பொன்னி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை வைஷ்ணவி, புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்தத் தொடருக்கு லட்சுமி மெஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுட்டும் விழிச் சுடரே, கனா கண்டேனடி, அழகே அழகு என அடுத்தடுத்து புதிய தொடர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன. இவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன.
தற்போது நடிகை வைஷ்ணவி நாயகியாக நடிக்கும் புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடரில் வைஷ்ணவியுடன் வசந்த் வசி, ஷங்கரேஷ், மகேஷ், அஜித் என பலதரப்பட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

வசந்த் வசி, வைஷ்ணவி - படம் - இன்ஸ்டாகிராம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ஜோடியான நிரோஷா - ஸ்டாலின் இணை, இந்தத் தொடரிலும் சேர்ந்து நடிக்கின்றனர்.

நிரோஷா, ஸ்டாலின் - படம் - இன்ஸ்டாகிராம்
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார். ஸ்பெக்ட்ரா புரொடக்ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி, இந்திரா உள்ளிட்டத் தொடர்களை ஸ்பெக்ட்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Ponni Serial Actress Vaishnavis new serial Lakshmi Messin Vijay TV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு நடிகைகள் இணையும் மகா சங்கமம்!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!

மக்கள் மனம் கவர்ந்த நடிகை! விருது வென்றார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்!

தவெகவில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

