பாக்கியலட்சுமி தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற பாக்கியா - கோபி இணை மீண்டும் புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்தத் தொடருக்கு ஆதலால் காதல் செய்வீர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மூன்று குழந்தைகளுக்கு பெற்றோராக பாக்கியாவும் கோபியும் நடிக்கவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவாக கே.எஸ். சுசித்ராவும், கோபியாக சதீஷ் குமாரும் நடித்தனர். இந்த ஜோடி சின்ன திரை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும்போதும், மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு அதன் பிறகு குடும்பத்தில் சந்திக்கும் சவால்களை கோபி தனது நடிப்பின் மூலம் தத்ரூபமாகக் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார்.

பாக்கியலட்சுமி தொடரில்... - படம் - எக்ஸ்
மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாக்கியலட்சுமி தொடர், 5 ஆண்டுககளுக்கும் மேலாக 1,469 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. இந்த ஜோடி தற்போது புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர். அதுவும் முதன்மை பாத்திரத்தில் இருவரும் நடிக்கவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அந்த புதிய தொடருக்கு ஆதலால் காதல் செய்வீர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளுக்கு பெற்றோராக இருவரும் நடிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி தொடருக்குப் பிறகு கே.எஸ். சுசித்ராவும் சதீஷ்குமாரும் இணைந்து நடிக்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Baakiyalakshmi Serial Pair Gopi Baakiya Again Doing as Reel Pair Aadhalal Kadhal Seiveer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


