விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடர் இயக்குநர் இயக்கும் புதிய தொடரின் வருகைக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.
5 ஆண்டுகளுக்கு மேலாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்தாண்டு ஆக. 8 ஆம் தேதி 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தத் தொடரை இயக்குநர் டேவிட் இயக்கியிருந்தார். இந்த நிலையில், இவர் இயக்கும் புதிய தொடருக்கும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் டேவிட் எழுதி இயக்கும் புதிய தொடர் லட்சுமி மெஸ். ஸ்பெக்ட்ரா புரொடக்ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிரோஷா - ஸ்டாலின் ஜோடி மீண்டும் லட்சுமி மெஸ் தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்தத் தொடர் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை பிரதானப்படுத்தி எடுக்கப்படுகிறது. குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரும் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் வைஷ்ணவி, வசந்த் வசி, ஷங்கரேஷ், மகேஷ், அஜித், பிக் பாஸ் பிரபலம் ரியா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இந்தத் தொடரில் இளம் தலைமுறை நடிகர்கள் பலர் நடிப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்ணாமலை குடும்பம், எதிர்நீச்சல், அழகே அழகு, அய்யனார் துணை உள்ளிட்ட பல தொடர்கள் கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் சூழலில், லட்சுமி மெஸ் தொடரும் அதே பாணியில் எடுக்கப்படுகிறது.
லட்சுமி மெஸ் தொடரின் முன்னோட்டக் காட்சி, ஓளிபரப்பு தேதி, நேரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Many fans are waiting for the arrival of a new series directed by the director of the series Bhagyalakshmi, which aired on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


