விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாக்கியலட்சுமி தொடர், மீண்டும் மறுஒளிபரப்பாகவுள்ளது.
அதுவும் முடிந்து ஓராண்டு முடிவதற்குள் மீண்டும் ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் 2020 ஜூலை 27 ஆம் தேதி தொடங்கப்பட்ட பாக்கியலட்சுமி தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக 2025 ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், 5 ஆண்டுகளாக 1,469 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பானது.
இத்தொடரில் நாயகியாக கே.எஸ். சுசித்ராவும், ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்தனர். நாயகனாக சதீஷ் குமார் நடித்திருந்தார். இவர்கள் மட்டுமின்றி, துணை கதாபாத்திரங்களான நேஹா மேனன், விஜே விஷால், ரித்திகா தமிழ்ச்செல்வி, திவ்யா கணேஷ், ரஞ்சித், மீனா செல்லமுத்து, விகாஷ் சம்பத், ராஜலட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பும் பாக்கியலட்சுமி தொடருக்கு பக்க பலமாக அமைந்தது.
வேறு பெண்ணுடன் உறவு கொண்டு, கணவரால் கைவிடப்பட்ட பெண், தனியொரு நபராக வாழ்வில் சாதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறுவதே பாக்கியலட்சுமி தொடரிக் மையக்கரு.
ஒருகட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும் விதமாக கதையின் போக்கு இருந்ததால், சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதாவது, நல்ல கணவராக இல்லாவிட்டாலும், நல்ல தகப்பனாக இருக்கப் போராடும் சதீஷ் (கோபி), ஒருகட்டத்திற்கு பிறகு அம்மாவை கவனித்துக்கொள்ளும் பிள்ளைகள் என திரைக்கதை மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் அமைக்கப்பட்டது.
பல்வேறு விமர்சனங்கள், ட்ரோல்களை சந்தித்திருந்தாலும் மக்களின் நினைவுகளில் என்றுமே நிலைத்திருக்கும் தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் மாறியது என்றே கூறலாம். இந்தத் தொடர் கடந்த மாதம் அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது.
முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. திங்கள் - வெள்ளி வரை காலை 10 மணிக்கு ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது.
இதேபோன்று விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு வெற்றித் தொடரான, தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரும் மறு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இத்தொடர் திங்கள் - வெள்ளி வரை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
Baakiyalakshmi, Thendral vanthu ennai thodum Serials retelecast in vijay TV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

பக்தித் தொடரில் நடிக்கும் விஜய் பட நாயகி!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!

கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


