மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பிரியமானவள் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

News image

பிரியமானவள் - எக்ஸ்

Updated On :25 மார்ச் 2026, 4:07 pm IST

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பிரியமானவள் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2015 முதல் 2019 வரை 4 ஆண்டுகளுக்கு பிரியமானவள் தொடர் ஒளிபரப்பானது. நடிகை பிரவீணா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுபலேகா சுதாகர் நடித்திருந்தார்.

இவர்களுடன் தரிஷ், ஹரிபிரியா இசை, சிவரஞ்சனி, அபிநவ்யா, கிரண், முகமது அஸீம், வினித் கார்த்திக், விஜய், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பிரியமானவள் தொடரிலிருந்து...

பிரியமானவள் தொடரிலிருந்து... - எக்ஸ்

உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு குடும்பப் பின்னணியில் உருவான இந்தத் தொடர், இல்லத்தரசிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மகன்களைப் பெற்ற பெற்றோர் மருமகள்களை வரவேற்றுக்கொண்ட விதமும், சிக்கல்களை சவால்களை எதிகொண்ட விதமும் இத்தொடரில் பலரைக் கவர்ந்தது.

தற்போது 7 ஆண்டுகள் கழித்து பிரியமானவள் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. நன்கு வரவேற்பைப் பெற்ற தொடர்கள் சமீப காலமாக மறுஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது.

மெட்டிஒலி, திருமதி செல்வம் போன்ற தொடர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பானது.

இதேபோன்று நாகினி, சக்தி திருவிளையாடல், தென்றல் வந்து என்னைத் தொடும், முத்தழகு ஆகிய தொடர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அந்தவகையில் தற்போது பிரியமானவள் தொடரும் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை (ஒரு மணி நேரம்) ஒளிபரப்பாகவுள்ளது. இல்லத்தரசிகளிடையே பிரியமானவள் மீண்டும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Suntvs popular serial Priyamanaval will be aired again in Kalainger TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.