விஜய் தொலைக்காட்சியில் இன்று(ஏப். 27) முதல் தாய் மாமன் தொடர் ஒளிபரப்பாகவுள்ளதால், தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் தாய் மாமன் தொடர், இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் இயக்கும் இந்தத் தொடரை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
இதனால், மகாநதி, சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மகாநதி தொடர் இன்று முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் பாகம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
As the series Thai Maman begins airing on Vijay TV today (April 27), the broadcast timings for the other series have been rescheduled.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அவள் வருவாளா, சலங்கை ஒலி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


