மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது
தந்தையின்றி நான்கு மகள்களை வளர்க்கும் தாயின் கதையாகத் தொடங்கிய இந்தத் தொடரில் தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று, திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், காவியா, சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்,
இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தாய் மாமன் தொடர் வருகையால் மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாநதி தொடர் ஏப். 27 முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The broadcast time of the Mahanadi series has been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


