மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

மிருணாள் தாக்குர் குறித்து...

News image

மிருணாள் தாக்குர் - x

Updated On :13 ஏப்ரல் 2026, 3:58 pm IST

நடிகை மிருணாள் தாக்குர் திருமண பேச்சால் வெட்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகை மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து, இருவருமே பதில் சொல்லாமல் இருந்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தற்போது, டக்காய்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், அண்மையில் வெளியானது.

இந்த நிலையில், இதன் நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், “நடிகை மிருணாள் தாக்குரின் அனைத்து படங்களையும் பார்த்துவிட்டேன். மிகச்சிறப்பாக நடிக்கக்கூடியவர். அவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகரைத் திருமணம் செய்துகொண்டு இங்கேயே இருக்க வேண்டும். அப்போதுதான், தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வைக்க முடியும்” என்றார்.

இதனைக் கேட்ட மிருணாள் தாக்குர் வெட்கப்பட்டு சிரிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், இயக்குநர் நாக் அஸ்வின், மிருணாளை பழம்பெரும் நடிகை மதுபாலாவுடன் ஒப்பிட்டு பாராட்டியதுடன், எப்போதும் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என விருப்பத்தையும் தெரிவித்தார்.

Summary

A video of actress Mrunal Thakur blushing at the mention of marriage has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.