நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகை மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பல துறைகளிலும் கவனம் பெற்றவர் தனுஷ். இறுதியாக, இவர் நடித்த தேரே இஷ்க் மெய்ன் வெற்றி பெற்றதுடன் ரூ. 150 கோடி வரை வசூலித்து அசத்தியது.
தற்போது, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப். 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடித்து வருவதுடன் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிகை மிருணாள் தாக்குரை முன்னணி கதாபாத்திரமாக வைத்து பீரியட் கதையை இயக்கவுள்ளாராம். இதில், மிருணாள் பெண் தெய்வமாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுவதுடன் இதற்கான தோற்றப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷும் மிருணாளும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்வதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Reports suggest that actress Mrunal Thakur is set to star in a film directed by actor Dhanush.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

