நடிகை மிருணாள் தாக்குர் காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.
அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து, இருவருமே பதில் சொல்லாமல் இருந்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தற்போது, டக்காய்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற மிருணாளிடம் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இப்போது காதலிக்க நேரமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ”எனக்கு நல்ல சம்பளம் கொடுக்க முன்வந்தாலும் நான் சில கதைகளை வேண்டாம் என்று நிராகரித்து விடுவேன். நல்ல கதாபாத்திரங்களையே முக்கியமென நினைக்கிறேன். சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவில் யஷ்னா ஆகியவை என் திரைப்பயணத்தில் மைல்கல்கள். அப்படிப்பட்ட, கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே காத்திருக்கிறேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Actress Mrunal Thakur has opened up about love.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்
’லார்ட் தாக்குர்’ மீம் அல்ல; அன்பு..! ஷர்துல் தாக்குர் பேட்டி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


