மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது!

ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது பற்றி...

News image

ஜன நாயகன் படத்தில் விஜய் - youtube

Updated On :10 ஏப்ரல் 2026, 9:29 am IST

ஜன நாயகன் முழுப் படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜன நாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.

தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.

தற்போது, மறுதணிக்கைக்கான திரைப்படத்தை மத்திய சான்றிதழ் வாரியம் பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதன்காரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது.

இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழுப் படமும் இணையத்தில் வெளியாகியதால் படக்குழுவினரும் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Summary

The entire movie Jana Nayagan has been illegally released online!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.