ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
பின், மொத்த படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இதுதொடர்பாக சிலரை அவர்கள் கைதும் செய்தனர்.
தற்போது இந்த விவகாரத்தில் அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீது திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக பிரதீப் ராகவ் நேரடியாக காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணம்.
மேலும் சங்கத்தின் விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர் அல்லாதோரை உதவியாளராக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Summary
The Southern India Film Editor's Association (SIFEA) announced on Friday that film editor Pradeep E Raghav has been suspended for allegedly violating union bylaws and failing to prevent the illegal online leak of the film 'Jana Nayagan,' starring top actor Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!

இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!

உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்..! வக்கீல் நோட்டீஸ் அளித்த ஜன நாயகன் படக்குழு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


