விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் முழுத் திரைப்படமும் கடந்த வெள்ளிக் கிழமை (ஏப். 10) அதிகாலை இணையத்தில் வெளியானது.
இது குறித்து குசைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 6 பேரை காவல் துறையினர் இன்று (ஏப். 12) கைது செய்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவா் நடித்த கடைசிப்படமாக ஜன நாயகன் அமைந்தது. பொங்கல் விடுமுறையை இலக்கு வைத்து, ஜனவரியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா், இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இணையத்தில் முழுப் படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டிருந்த கோப்பிலிருந்து படம் வெளியாகியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தங்களுக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவித்துள்ளது.
திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் கேடிஎம் (கீ டெலிவரி மெசேஜ்) எனும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) பாதுகாப்பு முறையை தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. இந்த கடவுச்சொல் இயக்குநர் அல்லது தயாரிப்பாளரிடமே இருக்கும். அந்த கடவுச்சொல் இல்லாமல் படத்தை யாராலும் அணுக முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.
Summary
Vijays Jana Nayagan Movie Leak Scandal 6 Arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


