அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாள்களுக்கு முன் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் படப்படிப்பு நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என டி. ராஜேந்தர் கூறியிருந்தார்.
அவர் வெளியிட்ட ஆடியோவில், “வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க சிலம்பரசனுக்கு ஐசரி கணேஷ் முன்பணம் அளித்திருந்தார். அப்பணம் தொடர்பாக நடந்த நீதிமன்ற வழக்கிலும் அப்பணம் சிலம்பரசனுக்குதான் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இதனை மதிக்காமல் ஐசரி கணேஷ் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்துகொண்டு அரசன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐசரி கணேஷுக்குத் தர வேண்டிய ரூ. 6.5 கோடியில் ரூ. 4 கோடியை சிலம்பரசனும் மீதமுள்ள தொகையை அரசன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனராம்.
இதனால், நிறுத்தி வைக்கப்பட்ட அரசன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல், சிலம்பரசன் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
It has been reported that the shooting of the movie Arasan will resume.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

அரசன் படப்பிடிப்பு துவங்குமா?
அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! டி. ராஜேந்தர் குற்றச்சாட்டு!
அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


