அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை, வி கிரியேஷன்ஸ் மூலம் கலைப்புலி எஸ். தாணு பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (மார்ச் 7) நிறுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் கூறியது சிலம்பரசன் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்காக எஸ்டிஆருக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அளித்த முன்பணம் சிலம்பரசனுக்குதான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் பழைய வழக்கை எடுத்துக்கொண்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஐசரி கணேஷ் அரசன் படப்பிடிப்பை நிறுத்தியதாக டி. ஆர். குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இருந்தாலும், விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு திடீர் என நிறுத்தப்பட்டது அரசன் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பினருக்கும் சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பட்டு படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் துவங்க வேண்டுமென சிலம்பரசன் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
The sudden stop of filming of the movie Arasan has caused confusion.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

சுமுகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?
அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! டி. ராஜேந்தர் குற்றச்சாட்டு!

அரசன் புதிய தோற்றத்தில் சிலம்பரசன்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


