இயக்குநர் பாலா தனக்கும் நாதக தலைவர் சீமானுக்கும் இடையேயான உறவு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் குறைவான திரைப்படங்களை இயக்கினாலும் இந்தியளவில் தன் காலத்து இயக்குநர்களிடம் நன்மதிப்புடனே இருக்கிறார். பாலாவின் நான் கடவுள், பரதேசி ஆகிய படங்களை வியக்காத திரை விமர்சகர்கள் குறைவுதான்.
இறுதியாக இயக்கிய சில படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் என்றே மதிப்பிடப்படுகிறார்.
இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் பாலா, நாம் தமிழ் கட்சித் தலைவர் சீமானுக்கும் தனக்குமான உறவு குறித்து பேசினார்.
அப்போது, “நானும் அண்ணன் சீமானும் நெருங்கிய உறவில் இருப்பவர்கள். ஆரம்ப காலங்களில் பசி அதிகமாக எடுத்தால் நேராக அவர் வீட்டுக்குதான் செல்வேன். அங்கு, எப்போதும் 20 பேர் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் சேர்த்தே சீமான் சம்பாதித்தார். ஒருமுறை, நான் கோபித்துக்கொண்டு அண்ணன் வீட்டுக்குதான் சென்றேன். அங்கு, மூன்று நாள் இருந்தேன்.
என்னைக் கவனித்தவர், என் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் விஷயத்தைச் சொல்லி அவரை அழைத்து வந்தார். இயக்குநர் என்னைப் பார்த்ததும் அழுதுவிட்டார். பின், கிளம்பிச் சென்றேன். இவரை அழைத்து வந்து என்னை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாரே என்று சீமானிடம் கோபப்பட்டேன். அன்பாக இருந்தால் சீமான் அண்ணனை ‘கருவாயா’ என்பேன். அவர் அன்பாக இருந்தால், ‘தம்பி’ என்பார். கோபமாக இருந்தால், ‘வாங்க, போங்க’ என்பார். இன்று பெரிய அரசியல் தலைவரான பின் அவரைக் கருவாயா எனக் கூற முடியவில்லை என வருத்தப்படுகிறேன்.” என நெகிழ்ச்சியாக இருவருக்குமான உறவு குறித்து பகிர்ந்துகொண்டார்.
Summary
director bala shares his life incident with seeman and balu mahendra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்

அஜித் - ஷாலினியால் உருவான ஹாய்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


