இசையமைப்பாளர் இளையராஜா தன்னிடம் சரியாக பேசுவதில்லை என கங்கை அமரன் ஆதங்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 49 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருப்பவர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என அழுத்தமான பங்களிப்பைச் செய்தவர். தற்போது, லெனின் பாண்டியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பருந்து திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கங்கை அமரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசியவர், “இப்போதெல்லாம் நானும் என் அண்ணன் இளையராஜாவும் அண்ணன் - தம்பி மாதிரியே இல்லை. நான் பார்க்கச் சென்றாலும், ஒரு வார்த்தைகூட பேசாமல் எழுந்து நின்று அப்படியே மெதுவாக சுற்றுகிறார். என்ன என பார்வையிலேயே கேட்கிறார். சரியாக பேசுவதில்லை. தற்போது, இரண்டாவது சிம்பொனியை எழுதிக்கொண்டிருக்கிறார். இதை நிகழ்த்தும்போது நான் கூட இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறேன். அவருக்கு இசையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. தன் ஞானத்தை இன்றுவரை சிதறாமல் வைத்திருக்கிறார்.
யூடியூபில் பலரும் இளையராஜா பாடல்களைத் தேடுகிறார்கள். நானும் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய பாடல்களை எழுதியதுடன் இசையமைத்திருக்கிறேன். அதையும் ரசிகர்கள் கேட்க வேண்டும். எனக்குப் பின் சினிமாவுக்கு வந்த பாக்யராஜ் 50 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு செய்ததாக விழா எடுத்துள்ளார். இது எப்படி எனத் தெரியவில்லை.” எனக் கூறினார்.
Summary
Gangai Amaran has expressed his grievance that Ilaiyaraaja does not speak to him properly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! விஜய் படத்துடன் பாடலைப் பகிர்ந்த இளையராஜா!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா
கங்கை அமரன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

