சின்ன திரையில் பிரபல ஜோடியான ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக், தங்களின் 8 ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.
ராஜா ராணி தொடரில் நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், தற்போது வரை தங்கள் துறையிலும், தனிப்பட்ட வாழ்கையிலும் வெற்றிகரமான ஜோடியாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் 2019 வரை ராஜா ராணி தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் ஆல்யா மானசா நாயகியாகவும், சஞ்சீவ் கார்த்திக் நாயகனாகவும் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து ராஜா ராணி இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது.
முதல் பாகத்தில் ஆல்யா மானசாவின் வசீகரமானத் தோற்றமும் வெள்ளந்தியான நடிப்பும், சஞ்சீவ் கார்த்திக்கின் அனுபவம் வாய்ந்த நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் அதிகரிக்கத் தொடங்கினர்.
இந்தத் தொடரில் நடிக்கும்போது இருவரும் இடையிலான நட்பு காதலாக மலர்ந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சின்ன திரையில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வரும் ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த தம்பதிளாக உள்ளனர்.
இனியா, பாரிஜாதம் என அடுத்தடுத்த தொடர்களில் நாயகியாக ஆல்யா நடித்தார். தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இதேபோன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடரில் நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களின் 8 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்களுடன் ஆல்யா பகிர்ந்துள்ளார். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
alya manasa and Sanjeev Karthick Become a Fan Favorite Couple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


