சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
படத்தின் முதல்பாதி கதையை நடிகர் ரஜினியிடம் கூறிய லோகேஷ் கனகராஜ், கதைக்கேற்ப ரஜினியின் தோற்றத்திலும் உடல்மொழியிலும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளாராம். பெரிய பொருள் செலவில் உருவாகும் இப்படம், தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி!
விக்ரமின் சியான் - 63 படப்பிடிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


