பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விக்ரமின் சியான் - 63 படப்பிடிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விக்ரம் நடிக்கும் சியான் 63 படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

சியான் - 63 படத்தில் விக்ரம். - படம்: எக்ஸ் / சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

நடிகர் விக்ரமின் 63-ஆவது திரைப்படமாக உருவாகும் சியான் 63 படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் விக்ரம் தன்னுடைய 63-ஆவது திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவிருக்கிறது.

வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனந்த் ஷங்கருடனான இந்தப் படத்திற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியில் இருப்பதால் இதற்காக நடிகர் விக்ரம் உடல்பயிற்சிகளைத் தீவிரமாக செய்து வந்ததாக தகவல்கள் மூலம் தெரிய வந்தன.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரியா ஷிபு நாயகியாக நடிக்க எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Summary

Filming of Vikram's 'Chiyaan 63': Official Announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.