பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி!

பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி செலுத்தியது பற்றி...

News image

பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி - x

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பாரதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’வில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். பின்னர், 10 ஆண்டுகள் கழித்து, கொடி பறக்குது படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடித்தார்.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ராதா, சுகாசினி உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அரசியல் தலைவர்களும், திரைத் துறையினரும், ரசிகர்களும் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த அவரது இல்லத்துக்கு வந்து கொண்டுள்ளனர்.

Summary

Actor Rajini pays tribute to Bharathiraja's mortal remains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.