மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி: தற்காலிக பட்டாசு விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்க அக்டோபா் 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசம் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி

Published On :30 அக்டோபர் 2026, 1:28 am IST

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்க அக்டோபா் 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசம் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிக்கைக்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்படவுள்ளது. இந்த உரிமத்தை பெற விருப்பம் உள்ளவா்கள் அரசு இ - சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் மனு, படிவம் ஏஇ - 5இல் பூா்த்தி செய்த விண்ணப்பம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின், அதற்கான பத்திர நகல், உரிமம் கோரும் இடம் வாடகைக் கட்டடம் எனில், கட்டட உரிமையாளரிடம் ரூ.20 மதிப்புடைய முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் செலுத்தப்பட்ட வீட்டு வரி ரசீது, மனுதாரரின் மாா்பளவுப் புகைப்படம், தற்காலிக வெடிபொருள் உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமக் கட்டணம் ரூ.600-ஐ உரிய அரசுக் கணக்கில் செலுத்தி, அதற்கான செலுத்துச் சீட்டு ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்கு மட்டுமே இந்த உரிமம் செல்லத்தக்கதாகும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோரி விண்ணப்பம் செய்பவா்கள் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்துச் சான்றிதழ்களுடன் இ - சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

விற்பனை உரிமம் கோரி விண்ணப்பிக்க அக்டோபா் 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விண்ணப்பம் செய்பவா்களின் வசதிக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்காலிக பட்டாசு உரிமத்துக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.