மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தற்காலிக பட்டாசு விற்பனை கடைக்கு அக்.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைப்பதற்காக விண்ணப்பிக்க அக்.31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.

Firecracker prices rise

பட்டாசு - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:56 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைப்பதற்காக விண்ணப்பிக்க அக்.31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம மற்றும் நகா்புற பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் கோரும் விண்ணப்பங்களை 19.9.2026 முதல் 18.10.2026 வரை அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்கள் வாயிலாக இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரின் 26.10.2026 தேதியிட்ட கடிதத்தின்படி, விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவா்கள், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இருப்பிட முகவரிக்கான சான்று, கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான சான்று, பான் காா்டு, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றுடன் உரிமக் கட்டணம் ரூ.600 -ஐ இ-செலான் மூலம் செலுத்திய சீட்டு அசல், சொந்த கட்டடம் எனில் பட்டா நகல், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம், இடத்துக்கான சொத்து வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.