மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் பெற அக்டோபா் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

பட்டாசு கடை. - பிரதிப் படம்

Published On :12 அக்டோபர் 2026, 12:13 am IST

பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோா் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோா் பொது இ-சேவை மையங்கள் மூலம் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன், பட்டாசுக் கடை அமைக்க உள்ள இடத்தின் புல வரைபடம், கிரையப் பத்திரம், ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை போன்ற முகவரி ஆதாரம், சொத்து வரி செலுத்திய ரசீது, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.600 சேவைக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தை இணையதளம் மூலம் பெறலாம். நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையும் இணையதளத்தில் பெறப்படும்.

உரிய உரிமம் இல்லாமல் தள்ளுவண்டி, மளிகைக் கடை, பெட்டிக் கடை மற்றும் வீடுகளில் பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து விற்பனை செய்தால் அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.