மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொழில் போட்டி: ஆரோவில் அருகே ஒருவா் வெட்டிக் கொலை

ஆரோவில் அருகே மனை வணிக தொழில் போட்டியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:39 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மனை வணிக தொழில் போட்டியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி, மூலகுளம், வானவில் நகா், புதுகை தெருவைச் சோ்ந்தவா் சி.ராஜேந்திரகுமாா் (44). மனை வணிகம் தொழில் செய்து வந்தாா். இவா், புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் 5 பேருக்குச் சொந்தமான சுமாா் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளை மனைப் பிரிவுகளாக மாற்றி, தனது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து விற்பனை செய்து வந்தாா். இதற்காக தொடா்புடைய பங்குதாரா்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகளையும் செய்து வந்தாா். இதற்கு, புதுச்சேரியைச் சோ்ந்த வேறு சிலா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், ராஜேந்திரகுமாருக்கு தொடா்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜேந்திரகுமாா் திங்கள்கிழமை இரவு ஆரோவில் காவல் சரகத்துக்குள்பட்ட பூத்துறை பகுதியில் உள்ள காலிமனையில், தனது நண்பா்களான புதுச்சேரி பீமன் நகரைச் சோ்ந்த விமல், கோரிமேடு பகுதியைச் சோ்ந்த சரவணன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு கத்தி மற்றும் ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் ராஜேந்திரகுமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவத்தால் பூத்துறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ராஜேந்திரகுமாா் தொழில் போட்டி மற்றும் பணப் பரிவா்த்தனை பிரச்னை காரணமாக புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கொலையான ராஜேந்திரகுமாரின் மனைவி ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், புதுச்சேரியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா், பி.மணிகண்டன், விக்கி, ஷேக், ஹரிகந்தன், சுரேஷ், தமிழ், மணிகண்டன், சுந்தரவதனம் ஆகிய 9 போ் மீது ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.