மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சூதாட்டத்தில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் நேபாள இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பிரதிப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 12:22 am IST

சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் நேபாள இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் கணேஷ் (26). இவா், சென்னை ராஜீவ் காந்தி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், பெருங்குடி கோவிந்தசாமி நகரில் நண்பா்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். கணேஷும், அவரது நண்பா்களும் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தகராறில் கணேஷை, அவரது நண்பா் அங்கு கிடந்த கத்தியால் குத்தியதில், காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். மருத்துவா்கள், துரைப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று கணேஷ் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, கணேஷுடன் தங்கியிருந்தவா்களிடம் விசாரணை நடத்தி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பதுங்கியிருந்த கௌரவ் என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.